இலங்கை

குடும்ப தகராறில் மருமகனின் மண்டையை உடைத்த மாமா

Published

on

குடும்ப தகராறில் மருமகனின் மண்டையை உடைத்த மாமா

கேகாலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் குண்டாந்தடியால் மாமா தனது மருமகன் மீது தாக்குதல் நடத்தியதில், மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

இறந்தவர் 45 வயதுடைய தினேசன் செல்வராஜ் என்பவராவார்.

சந்தேக நபரான 85 வயதான மாமாவிற்கு மருமகனிற்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், மருமகனின் தலை மற்றும் நெஞ்சில் மாமா தாக்கியுள்ளார்.இதனால், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தெஹியோவிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவிசாவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட விருந்தார்.

Advertisement

என தெரிவித்த தெஹியோவிட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version