இலங்கை

கொழும்பின் புறநகர் பகுதியில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த மர்மநபரால் ஒருவர் பலி!

Published

on

கொழும்பின் புறநகர் பகுதியில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த மர்மநபரால் ஒருவர் பலி!

ஹிரான பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் இன்று (11) அதிகாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Advertisement

சந்தேக நபர்களைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version