பொழுதுபோக்கு

கோவையில் நடைபெறும் ‘ஸ்டார்ஸ் நைட் அவுட் ஷோ’: தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பங்கேற்பு

Published

on

கோவையில் நடைபெறும் ‘ஸ்டார்ஸ் நைட் அவுட் ஷோ’: தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பங்கேற்பு

கோவையில் நாளை (ஜூலை 12 ஆம் தேதி) நடைபெற உள்ள Play On – ஸ்டார்ஸ் நைட் அவுட்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வந்த நடிகைகள் தமன்னா, கீர்த்தி ஷெட்டி, ஓவியா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோருக்கு கோவை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 12, ந்தேதி “Play On – ஸ்டார்ஸ் நைட் அவுட்” ஷோ எனும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிக் ஹிட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக நடைபெற உள்ள இதில்,பிரபல நடிகைகள்  தமன்னா, கீர்த்தி ஷெட்டி, ஓவியா, யாஷிகா ஆனந்த், உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனர்.மேலும் இந்நிகழ்வில், ஹரிஷ் ராகவேந்திரா, ஹர்ஷவர்தன், சிவாங்கி கிரிஷ், ஐக்கி பெர்ரி உள்ளிட்ட இசைக்கலைஞர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை மற்றும் மும்பையில் இருந்து நட்சத்திரங்களுக்கு கோவை விமான நிலையத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாரதி மோகன் வரவேற்றார்.இதில் நடிகைகள் தமன்னா, ஓவியா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட முன்னனி நடிகைகளை விமான நிலையத்தில் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து அவர்களுடன் செல்ல எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து நடிகைகள் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ஸ்டார் நைட் ஷோவில்,ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடிய, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நேரடி பாடல்கள், DJ இசை தொகுப்புகள், நவீன ஒலி மற்றும் ஒளி தொழில்நுட்பத்துடன் கூடிய மேடை வடிவமைப்பு, என பல்வேறு சிறப்பம்சங்களுடன் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version