இலங்கை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ; யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களின் சாதனை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ; யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களின் சாதனை
2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பெறுபேறுகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களுள் 82 பேர் அதி திறமை சித்தியான 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அத்துடன் 73 மாணவர்கள் 8ஏ சித்திகளையும், 33 மாணவர்கள் 7ஏ சித்திகளையும், 24 மாணவர்கள் 6ஏ சித்திகளையும், 20 மாணவர்கள் 5ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.
அதேவேளை 2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 345 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், 342 பேர் சித்தியடைந்துள்ளனர்.
மேலும் , 232 மாணவர்கள் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.