சினிமா
சரிகமப சீனியர் 5!! கங்கை அமரனால் போட்டியாளர் செந்தமிழனுக்கு கிடைத்த வாய்ப்பு..
சரிகமப சீனியர் 5!! கங்கை அமரனால் போட்டியாளர் செந்தமிழனுக்கு கிடைத்த வாய்ப்பு..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சரிகமப. இந்நிகழ்சியில் சீனியர் 5வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. பல போட்டியாளர்களில் திறமையை பார்த்து நடுவர்கள் உட்பட பலரும் பிரம்பித்து வருகிறார்கள்.இந்த வாரம் இசையமைப்பாளர் கங்கை அமரன் ரவுண்ட் நடந்துள்ளது. கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டு பல சினிமா பிரபலங்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, போட்டியாளர் செந்தமிழன் சிறப்பாக பாடி அசத்தியுள்ளார்.செந்தமிழன் பாட்டை கேட்ட கங்கை அமரன், எனக்கு சின்ன உதவி செய்யணும் நீங்கள். செப்டம்பர் மாதம் என்னுடைய கச்சேரி மியூசிக் அகாடமியில் நடக்கவுள்ளது. அங்கு நீங்கள் வந்து பாடிக்கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.இதனை கேட்ட செந்தமிழன் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி, நெகிழ்ச்சியான தருணம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.