இலங்கை
சர்க்கரை நோயாளிகள் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
சர்க்கரை நோயாளிகள் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
சர்க்கரை நோயாளிகள், இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. சர்க்கரை மட்டும் அல்ல, வேறு சில உணவுகளும், நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானவை.
எனவே இனிப்புகள் நிறைந்த, கேக் வகைகள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ்கள், சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்த்த இனிப்பு வகைகள் ஆகியவற்றை தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், இங்கே கொடுக்கப்பட்டுள்ள, குறிப்பிட்ட சில உணவுகளையும் தவிர்ப்பது அவசியம்.
மைதா மாவினால் ஆன உணவுகள்:
மைதாவில் தயாரிக்கப்பட்ட வெள்ளை பிரட், பாஸ்தா, பிஸ்கட், பரோட்டா ஆகிய உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சுகர் லெவலை எகிற வைத்து, உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.
எனவே சர்க்கரை நோயாளிகள், இதற்கு பதிலாக, பல தானிய ரொட்டி, ஓட்ஸ் வகைகள் மற்றும் பிற தானிய உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறமை கொண்டவை.
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள்: ரெடி டு ஈட் வகை உணவுகள், ஆரோக்கியமானவை அல்ல. நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்க, அவற்றில் சேர்க்கப்படும் பிரிசர்வேடிவ்கள் மற்றும் ரசாயனங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு.
அதோடு அதில் சர்க்கரையும் கொழுப்பும் அதிகம் இருக்கும். இதனை அடிக்கடி உட்கொள்வதால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ராலும் அதிகரிக்கும். வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரெஷ் உணவுகள் எப்போதுமே ஆரோக்கியமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் :பொதுவாகவே எண்ணெய் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. அதிலும் எண்ணெயில் பொரித்த பஜ்ஜி பக்கோடா சிப்ஸ் போன்றவை சாப்பிட சுவையாக இருந்தாலும், அவற்றில் டிரான்ஸ் கொழுப்பு அதிகம் இருப்பதால், உடலில் சர்க்கரை கொழுப்பு ஆகிய இரண்டும் அதிகரிக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்குவதோடு, இதய நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது.
சுவையான உணவுகளை சாப்பிட விரும்புவது இயல்புதான். அதில் தவறு ஏதும் கிடையாது. ஆனால் அதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல. இதனை உணவில் எப்போதாவது ஒருமுறை சேர்த்துக் கொள்வதால் ஆபத்து இல்லை. இதனை வழக்கமாக பின்பற்றுவது தான் தவறு.