இலங்கை
சாயும் அபாயத்தில் மின்கம்பம் ; உடனடி நடவடிக்கை கோரும் பொதுமக்கள்
சாயும் அபாயத்தில் மின்கம்பம் ; உடனடி நடவடிக்கை கோரும் பொதுமக்கள்
கிளிநொச்சி A9 வீதியின் ஆனையிறவு உப்பளத்தின் முன் பக்கமுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சாய்ந்து வீழும் அபாயத்தில் உள்ளது.
குறித்த மின் கம்பமானது, இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பு, கம்பியில் தொங்கிய நிலையில் கீழே விழாது காணப்படுகிறது.
தற்போது வீசிவரும் காற்றின் தாக்கத்தினால் நிலத்தில் வீழ்ந்து மின் விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாய நிலையில் உள்ளது.
இது தொடர்பாக இலங்கை மின்சார சபை உடனடி கவனத்தில் கொண்டு மின் விபத்து ஏற்படாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.