இலங்கை
செம்மணி மனிதப்புதைகுழி இரண்டாம்கட்ட அகழ்வின் அறிக்கை கோரியது மன்று
செம்மணி மனிதப்புதைகுழி இரண்டாம்கட்ட அகழ்வின் அறிக்கை கோரியது மன்று
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான, இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் செயற்பாட்டு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பேராசிரியர் ராஜ் சோமதேவாவுக்கு நீதிவான் ஏ. ஏ. ஆனந்தராஜாவினால் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. எதிர்வரும் 21ஆம் திகதி மீள அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே, இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பான செயற்பாட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.