இலங்கை
டெங்கு அபாயம்; பொலிகண்டி மேற்கில் 28 சிவப்பு எச்சரிக்கைகள்
டெங்கு அபாயம்; பொலிகண்டி மேற்கில் 28 சிவப்பு எச்சரிக்கைகள்
டெங்கு பெருகுவதற்கு ஏதுவான சூழலைப் பேணியமை காரணமாக, பொலிகண்டி மேற்கு ஜே/393 கிராம அலுவலர் பிரிவில் 28 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு, வல்வெட்டித்துறை நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பொலிகண்டி மேற்கில், வல்வெட்டித்துறை நகரசபையினல், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினர், பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து டெங்கு கட்டுப்பாட்டு சிறப்புச் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, 431 இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நுளம்புக்குடம்பிகள் பெருகக்கூடியதாக 159 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 28 ஆதன உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.