இலங்கை
டெங்கு நோயாளர்களில் 27 வீதமானோர் சிறுவர்!!!
டெங்கு நோயாளர்களில் 27 வீதமானோர் சிறுவர்!!!
நாட்டில் இதுவரை அடையாளங்காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள் எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவிக்கையில்;
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் போது நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 226 பாடசாலைகள் நுளம்பு மற்றும் நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 35 ஆயிரத்து 495 பகுதிகள் நுளம்புகள் பல்கிப் பெருகக்கூடிய இடங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன. நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள பெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்களாவர் – என்றார்.