சினிமா
தமிழ் நடிகை ப்ரீத்தி முகுந்தன் தற்போது மலையாளத்தில்!மைனே பியார்கியா ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் நடிகை ப்ரீத்தி முகுந்தன் தற்போது மலையாளத்தில்!மைனே பியார்கியா ரிலீஸ் தேதி அறிவிப்பு!
‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பிடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன், அதையடுத்து இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ‘ஆச கூட’ வீடியோ பாடலில் நடித்து, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றார். இப்போது, பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ப்ரீத்திக்கு திரையுலகில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை அளித்திருக்கிறது.இந்நிலையில், நடிகை ப்ரீத்தி முகுந்தன் தற்போது மலையாள சினிமாவிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். ‘மைனே பியார் கியா’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம், மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தை புதிய இயக்குநரான ஃபைசல் இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக ஹ்ரிது ஹருன் நடித்துள்ளார். இவர் முன்பு முரா, All We Imagine As Light போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் மேலும், அஸ்கர் அலி, மிதுன், ஜெகதிஷ், முஸ்தஃபா, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஜியோ பேபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல மொழிகளில் வெளியாகும் இப்படம், ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.திரைப்படத்தின் படக்குழு, இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ப்ரீத்தி முகுந்தனின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய பரிசாக அமையும் என கூறப்படுகிறது.புதிய கதைக்களம், வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் வலுவான நடிப்புத் திறன்கள் கொண்ட இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், மலையாள திரையுலகை ஒரே நேரத்தில் இணைக்கும் இந்த முயற்சி, நடிகை ப்ரீத்தி முகுந்தனின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கியமான கட்டமாகும்.