இலங்கை
பாடசாலையில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
பாடசாலையில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இந்தியாவின் மகாராஷ்டிரத்தில் பாடசாலை மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது,
மகாராஷ்டிரம் மாநிலத்தின் தாணே மாவட்டத்தில் ஷாஹாபூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாடசாலை கழிப்பறையில் ரத்தக் கறை இருப்பதாகக் கூறி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மாணவிகளிடம் நிர்வாகம் விசாரணை நடத்தினர்.
இதன்போது மாணவிகளில் யாருக்கேனும் மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறதா என்று வினவப்பட்டனர்.
தொடர்ந்து, மாதவிடாய் இருப்பதாகக் கூறப்பட்ட மாணவிகளின் கைரேகையைப் பெற்ற நிர்வாகம், மாதவிடாய் இல்லையெனக் கூறிய மாணவிகளை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர் பாசாலைக்கு சென்று போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, பாடசாலையின் முதல்வர், 4 ஆசிரியர்கள், உதவியாளர்கள் உள்பட 8 பேரை போக்ஸோ சட்டத்தின்கீழ் பொலிஸார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்லதாக கூற்ப்படுகின்றது.