பொழுதுபோக்கு

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்புக்காக உதவிகள் செய்ய முன்வர வேண்டும் – நடிகை திவ்யா துரைசாமி

Published

on

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்புக்காக உதவிகள் செய்ய முன்வர வேண்டும் – நடிகை திவ்யா துரைசாமி

கோவை புதூரில் செயல்பட்டு வரும் “சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு” காப்பகத்துக்கு செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக, 36 பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் இந்த காப்பகத்தில் வசித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் “வாழை, ப்ளூ ஸ்டார், எதற்கும் துணிந்தவன்” உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை திவ்யா துரைசாமி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் செய்தார். கலைநிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுடன் திவ்யா துரைசாமி சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியது, குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கும், சிறப்பு குழந்தைகளுக்கும் பரிசிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பேசிய நடிகை திவ்யா துரைசாமி, “பெண் குழந்தைகளுடன் வைத்து செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. நமக்கு சிறிதாக தோன்றும் விடயம், மற்றவர்களுக்கு பெரும் உதவியாக கூட இருக்கலாம். எனவே, நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும். பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் உள்ளிட்ட வருடம் முடிந்த அளவு நேரத்தை செலவிட வேண்டும் அவர்களுக்கு நம்மைப் போன்றவர்கள் உதவ வேண்டும் என வலியுறுத்தினார். “சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு” காப்பகத்தை சார்ந்த பாலசுப்ரமணியம் பேசும்போது, “பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்வற்காக இந்த காப்பகம் இயங்கி வருகிறது. பெண் குழந்தைகளை உற்சாகப்படுத்த இதுபோன்ற நிகழ்சிகளை நடத்தி வருகிறோம். மனிதம் வாழும் உலகில், அனைவரும் அனைவருக்குமான உறவுகள், அனைவரை அரவணைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை முன்னேற்ற வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்.செய்தி: பி.ரஹ்மான்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version