இலங்கை
மன்னாரில் விபத்தில் சிறுவன் உயிரிழப்பு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்குப் படுகாயம்
மன்னாரில் விபத்தில் சிறுவன் உயிரிழப்பு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்குப் படுகாயம்
மன்னார் நானாட்டான் நறுவிலிக்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். அந்தச் சிறுவனின் தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
நறுவிலிக் குளத்திலிருந்து நானாட்டான் நோக்கி, தந்தை, தாய், மகன், மகள் என நால்வருடன் பயணித்த மோட்டார்சைக்கிளும், நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனமுமே இவ்வாறு மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் நான்கு வயதேயான சிறுவன் உயிரிழந்துள்ளான். ஏனைய மூவரும் தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்பட்டுள்ளனர். வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.