சினிமா
மீனாவை வீட்டை விட்டுத் துரத்திய முத்து.! ஆதரவின்றித் தவிக்கும் மீனா… பரபரப்பான எபிசொட்!
மீனாவை வீட்டை விட்டுத் துரத்திய முத்து.! ஆதரவின்றித் தவிக்கும் மீனா… பரபரப்பான எபிசொட்!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து அண்ணாமலையை பார்த்து என்னோட நிலைமையில இருந்து பார்த்தால் தான் என்ர கோபமும் வலியும் தெரியும் என்கிறார்.மேலும் எனக்கு சொல்லாமலே மீனா சீதாவுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டால் இப்புடி பண்ணலாமா என்கிறார். இதனை தொடர்ந்து மீனா நான் பண்ணது தப்பு தான் என்று முத்துவைப் பார்த்துச் சொல்லுறார். அதைக் கேட்ட முத்து நீ எதுக்கு இங்க எல்லாம் வந்தனீ உன்ன இந்த வீட்டுக்கு வரக்கூடாதுனு சொன்னான் எல்லோ பிறகு ஏன் வந்தனீ என்கிறார். அதுக்கு மீனா மன்னிப்பு கேட்கத் தான் வந்தேன் என்கிறார்.இதனை அடுத்து முத்து நீ மன்னிப்பு கேட்டால் நான் பட்ட அசிங்கம் இல்லாமல் போகிடுமா என்று கேட்கிறார். பின் அண்ணாமலையும் நீ பண்ணது தப்பு என்று சொல்லுறார். அதனை அடுத்து விஜயாவும் முத்துக்கு தெரியாமல் நீ கல்யாணம் பண்ணி வைச்சது தப்பு என்கிறார். பின் ஸ்ருதி மீனா பண்ணதில என்ன தப்பிருக்கு என்று கேட்கிறார்.அதைக் கேட்ட முத்து இந்த விஷயத்தில யாரும் தலையிட வேணாம் இது எனக்கும் பொண்டாட்டிக்கும் உள்ள பிரச்சனை என்று சொல்லுறார். பின் மீனா முத்துவே தன்னை வந்து திரும்ப கூப்பிடுவாரு என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்.இதனைத் தொடர்ந்து அருண் சீதாவைப் பார்த்து முத்து தான் ஓவரா சீன் போடுறான் என்றால் நீயும் ஏன் அவன் பின்னாடியே போன என்று கேட்கிறார். அதுக்கு சீதா நீங்க என்ர கழுத்தில தாலி கட்டும் போது மாமா இல்லாமல் இருந்திருந்தால் அம்மாவும் மண்டபத்தில இருந்து போயிருப்பா என்று சொல்லுறார்.அதனை அடுத்து மீனா அழுதுகொண்டு வீட்ட வந்ததைப் பார்த்த மீனாவோட அம்மா மாப்பிள்ளைன்ர கோபம் இன்னும் போகலயா என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.