இலங்கை

முறிகண்டி பிள்ளையார் ஆலய கழிப்பறை பராமரிப்பு அவசியம் : பக்தர்களின் வேண்டுகோள்

Published

on

முறிகண்டி பிள்ளையார் ஆலய கழிப்பறை பராமரிப்பு அவசியம் : பக்தர்களின் வேண்டுகோள்

அறங்காவலர்களின் கவனத்திற்கு.
முறிகண்டிப் பிள்ளையார் மக்களின் பெரு நம்பிக்கைக்கு உரிய ஒரு ஆலயம் என்பது அனைவரும் அறிந்ததே.
A 9 வீதியில் இந்த ஆலயத்தை கடந்து செல்கின்ற பல வாகனங்கள் அங்கே நிறுத்தப்பட்டு மக்கள் வழிபடுவது வழக்கம்.

இந்த ஆலயம் நன்கு வருமானம் பெறுகின்ற ஒரு ஆலயமாகவும் திகழ்கிறது. பல பக்தர்கள் நம்பிக்கையோடு இறங்கி வணங்குகிறார்கள் அப்படி இறங்கி வருகின்ற பக்தர்கள் மலசலம் கழிப்பதற்காக ஆலயத்திற்கு சொந்தமான கழிப்பறைக்கு கிட்டவே போக முடியாத அளவிற்கு அது மிகவும் குப்பையாக உள்ளது .

Advertisement

இது இந்த ஆலயத்தில் மட்டுமல்ல பல இடங்களில் இந்த பிரச்சனைகள் உள்ளது .
ஆகவே அறங்காவலர்கள் இதை கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும் என்று எனது தாழ்மையான வேண்டுகோள்.
சில இடங்களில் குழாய்கள் இருக்கின்றன ஆனால் தண்ணி வருவதில்லை தெய்வத்திற்கு மட்டும் தங்க கவசமும் வெள்ளிக்கவசமும் அணிந்து வைப்பதால் தெய்வம் வந்து விடும் என்று நினைக்காமல் தெய்வத்திற்கும் கெட்ட வாடை பிடிக்காது என்பதை உணர்ந்து கொண்டு செயல்படவும்.

மக்களும் சற்றுச் சிந்திக்க வேண்டும் இதை அடுத்தவர் பயன்படுத்தக்கூடிய வகையில் நாம் பயன்படுத்த வேண்டும் என்று
இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம் தானியங்கிக் கருவிகளின் உதவியோடு சிறப்பாக பராமரிக்கலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version