பொழுதுபோக்கு

யானையை வைத்து புத்தி சொன்ன கமல்; ஹே ராம் படத்தில் இந்த சீன் பாத்தீங்களா? வைரல் வீடியோ!

Published

on

யானையை வைத்து புத்தி சொன்ன கமல்; ஹே ராம் படத்தில் இந்த சீன் பாத்தீங்களா? வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் பல புதுமையாக டெக்னாலஜிகளை அறிமுகம் செய்தவர் கமல்ஹாசன். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன் கடந்த 2000-ம் ஆண்டு இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்த படம் ஹே ராம்.கமல்ஹாசனுடன், ஷாருக்கான், ஹேமா மாலினி, வசுந்தரா தாஸ், ராணி முகர்ஜி, கவிஞர் வாலி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் மதக கலவரங்களையும், இந்து முஸ்லீம் ஒற்றுமை குறித்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதேபோல், ஹே ராம் படம் வெளியாகி 25 வருடங்கள் கடந்த பின்னரும் இந்த படம் குறித்து பேச்சு மக்கள் மத்தியில் அவ்வப்போது எழுந்து வருகிறது. மேலும் படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று பலரும் இந்த படத்தை தற்போது டிகோட் செய்து பதிவிட்டு வருகின்றனர். நாடு எங்கே போகிறது என்ற எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் ஹே ராம் படத்தில் இடம் பெற்ற ஒரு யானை தொடர்பான காட்சியை ஒருவர் டிகோட் செய்து பேசியுள்ளார். படத்தில் கமல்ஹாசனின் மனைவி ராணி முகர்ஜியை பலாத்காரம் செய்து கொலை செய்துவிடுவார்கள். அப்போது கொல்கத்தாவில் ஃபெஸ்டிவல் நடந்துகொண்டிருக்கும். வரும்போது பார்த்தால் அங்கு ஒரு யானை கட்டி போட்டிருக்கும். ஒரு இயக்குனராக ஒரு யானையை படத்தில் ஒரு ஷாட்டுக்கு கூட்டி வர வேண்டும் என்றால், வாடகை, இதர செலவுகள் என ரூ80 ஆயிரம செலவாகும். ஆனால் அந்த காட்சிக்காக யானையை கமல்ஹாசன் பயன்படுத்தியிருப்பார். ஹே ராம். pic.twitter.com/ydJ9tlgD7Kகாட்சியில், யானை நின்றுகொண்டிருக்க, யானை பாகம் கீழே இறந்து கிடப்பார். யானையின் காலில் சங்கிலி இருக்கும். அதில் ஒரு அங்கூசம் பொருத்தப்பட்டிருக்கும். யானை காலில் அங்கூசம் குத்தி இருந்தால் யானை மொழியில் அங்கேயே நில் என்று அர்த்தம். மதம் பிடிக்கக்கூடிய யானை மதம் பிடிக்காமல் அதற்கான கட்டுப்பாடுடன் ஒழுக்கத்துடன் இருக்கிறது. 5 அறிவு இருக்கக்கூடிய யானை ஒழுங்காக இருக்கிறது. அதே சமயம் மதம் பிடிக்க கூடாத ஆறறிவு உள்ள மனிதன், மதம் பிடித்து அலைகிறான். இது எத்தனை பேருக்கு புரியும் என்பது அவருக்கு தெரியாது. ஆனால் நான் ஒரு இயக்குனர், என் வழியில் நான் இதை வைக்கிறேன் என்று வைத்துள்ளார். சும்மா எல்லாம் வைக்க முடியாது. இந்த மாதிரி இந்த படத்தில், ஆயிரம் ஹிடன் டீட்டைல்ஸ் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version