இலங்கை

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Published

on

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இந்த மாதம் 28ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி தற்போது விடுமுறையில் இருப்பதால், வழக்கை மீண்டும் 28ஆம் திகதி அழைக்கப்படுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சுமார் 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாக குற்றஞ்சாட்டி, சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version