இலங்கை
வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பணத்தைக் கொண்டுவாருங்கள்; வலியுறுத்துகின்றார் சன்ன ஜயசுமன
வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பணத்தைக் கொண்டுவாருங்கள்; வலியுறுத்துகின்றார் சன்ன ஜயசுமன
இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் நிதியைப் பதுக்கிவைத்தால் அவற்றை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் சர்வஜனக் கட்சியின் உப தலைவருமான சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இந்த அரசு தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறது. நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளையே கொடுத்துள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுனன் மகேந்திரனை நாட்டுக்குக் கொண்டு வருவோம் என்று கூறினர். இப்போது வேறு கதை சொல்கிறார்கள். அவரை அழைத்து வருவது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல என்று கூறு கிறார்கள். இலங்கையில் இருந்து உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்று அங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்று கூறினார்கள். ஆட்சிக்கு வந்தால் அதை நாட்டுக்குக் கொண்டு வருவோம் என்று கூறினார்கள். இப்போது அந்தக் கதை எதுவும் இல்லை. இலங்கையர்கள் சட்டவிரோதமானமுறையில் நிதியைப் பதுக்கி வைத்திருந்தால் அதை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறோம். நாம் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -என்றார்.