தொழில்நுட்பம்
8,300mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங்… அசத்தலான அம்சங்களுடன் 15-ம் தேதி அறிமுகமாகிறது ஹானர் X70
8,300mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங்… அசத்தலான அம்சங்களுடன் 15-ம் தேதி அறிமுகமாகிறது ஹானர் X70
ஹானர் X70 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் (ஜூலை15) சீனாவில் அறிமுகமாகவுள்ளதாக, ஹானர் நிறுவனம் தனது வெய்போ (Weibo) சமூக வலைத்தளப் பக்கம் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது. புதிய X சீரிஸ் ஃபோனுக்கான முன்பதிவுகளை ஹானரின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் வழியாக ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், வரவிருக்கும் போனின் வண்ண விருப்பங்கள், வடிவமைப்பு குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.ஹானர் X70 ஜூலை 15 அன்று சீனாவில் இரவு 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 மணி) நடைபெறும் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய ஃபோனுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே ஹானரின் அதிகாரப்பூர்வ சீன இணையதளத்தில் தொடங்கியுள்ளன. பட்டியலில் உள்ள தகவல்படி, இந்த ஃபோன் கருப்பு, பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய 4 கவர்ச்சிகரமான வண்ண விருப்பங்களில், வட்ட வடிவ கேமரா அமைப்புடன் வெளிவரும்.ஹானர் நிறுவனம் X70 மாடலில் 8,300mAh ‘கிங்ஹாய் ஏரி’ (Qinghai Lake) பேட்டரியுடன் வரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனில் இடம்பெறும் மிகப்பெரிய பேட்டரிகளில் ஒன்றாகும். இந்த பேட்டரிக்கு 80W வயர்டு சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய இரண்டுக்கும் ஆதரவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹேண்ட்செட் மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) இயங்குதளத்தில் செயல்படும்.கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் X60 மாடலில் 5,800mAh பேட்டரி மற்றும் 35W சார்ஜிங் ஆதரவு மட்டுமே இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, ஹானர் X70-இன் 8,300mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங் திறன் குறிப்பிடத்தக்க மேம்பாடாகும்.எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்:6.79-இன்ச் 1.5K ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Snapdragon 6 Gen 4) சிப்செட் மூலம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12GB ரேம் உடன் 256GB மற்றும் 512GB உள் சேமிப்பு விருப்பங்கள் கிடைக்கும். இந்த போன் 7.7 மிமீ தடிமன் மற்றும் 193 கிராம் எடையுடன் வரும் என்று கூறப்படுகிறது. 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் 7.9 மிமீ தடிமன் மற்றும் 199 கிராம் எடையுடன் இருக்கலாம். பின்புறத்தில் OIS (Optical Image Stabilization) கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா இடம்பெற வாய்ப்புள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹானர் X70, கடந்த ஆண்டு வெளியான X60 மாடலை விட பல புதிய மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூலை 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டதும், இதன் விலை மற்றும் முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.