உலகம்

அமெரிக்க வெளியுறவுத்துறை ஊழியர்கள் 1,300க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம்

Published

on

அமெரிக்க வெளியுறவுத்துறை ஊழியர்கள் 1,300க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம்

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதலே பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்க வௌியுறவுத்துறையில் உள்ள 1,300க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

அதன்படி அமெரிக்காவில் உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வௌிநாட்டு பணிகளை மேற்கொண்டு வந்த துணை தூதர்கள் உட்பட 246 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். 

நிர்வாக மறுசீரமைப்பின் ஒருபகுதியாக இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தில் தொழிலதிபர் எலான் மஸ்க் இருந்தபோதுதான் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அமெரிக்க அரசு பணியில் இருந்த ஆயிரக்கணக்கானோர் நீக்கப்பட்டனர். 

Advertisement

தற்போது அவர் இல்லாத நிலையிலும் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இவ்வாறு ஊழியர்கள் குறைக்கப்பட்டு இருப்பது அமெரிக்க அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version