உலகம்

ஆபிரிக்க நாடுகளில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து!

Published

on

ஆபிரிக்க நாடுகளில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து!

புதியவன்.

06 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Advertisement

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றின் இருமல் மருந்தானது தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் குறித்த இருமல் மருந்தினை 10வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துவந்துள்ளனர். 

இந்த நிலையில், மருத்துவர்களினால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை தொடர்ந்து அருந்தி வந்த குழந்தைகள் பலருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை சோதனை செய்துள்ளது. 

இதன்போது, அந்த இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் அடங்கப்பட்டுள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ள காரணத்தால் குழந்தைகள் அதனை குடிக்கும் போது உடலில் நச்சுத்தன்மை அதிகமாகி உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இதனை தொடர்ந்தே குறித்த 6ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்து தடை செய்து விற்ற அனைத்து மருந்துகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீளப்பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version