சினிமா
ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்த ஜவான்
ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்த ஜவான்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 7ஆம் திகதி வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘ஜவான்’ திரைப்படம் உலக அளவில் ரூ.1,004.92 கோடி வசூலை குவித்துள்ளதாக இயக்குனர் அட்லீ தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.