சினிமா
இணையத்தில் வைரலாகிவரும் யோகிபாபு மகளின் பிறந்தநாள் நிகழ்வு புகைப்படங்கள்
இணையத்தில் வைரலாகிவரும் யோகிபாபு மகளின் பிறந்தநாள் நிகழ்வு புகைப்படங்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு யோகிபாபு, பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விசாகன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், யோகிபாபு தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை அண்மையில் மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, சூர்யா, விஷால், உதயநிதி, ஜெயம் ரவி, கார்த்தி
விஜய் வசந்த் என திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.