பொழுதுபோக்கு

இந்தியா முழுவதும் ரீமேக் ஆன படம்; ஆனா 39 மார்க் தான்: இயக்குனர் விக்ரமன் ஆதங்கம்!

Published

on

இந்தியா முழுவதும் ரீமேக் ஆன படம்; ஆனா 39 மார்க் தான்: இயக்குனர் விக்ரமன் ஆதங்கம்!

தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான திரைப்படங்கள் எடுப்பதில் இயக்குநர் விக்ரமன் முதன்மையானவர். குறிப்பாக, அவர் இயக்கிய ‘புது வசந்தம்’ படம், மாறுபட்ட கதையசம் கொண்டதாக அமைந்தது. அதுவரை வந்த தமிழ் படங்களில் ஆண் – பெண் நட்பு குறித்து பேசப்படாத நிலையில், அதன் மற்றொரு கோணத்தை படம்பிடித்து காண்பித்தவர் இயக்குநர் விக்ரமன்.அவர் இயக்கிய, ‘வானத்தை போல’, சூர்யவம்சம்’, பூவே உனக்காக’ போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால், விகடன் பத்திரிகையில் தனது திரைப்படங்களுக்கு குறைவான விமர்சன மதிப்பெண்களே கிடைத்தது என்று இயக்குநர் விக்ரமன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ஏறத்தாழ, 50 ஆண்டுகளுக்கும் மேலாக விகடனின் வாசகராக நான் இருக்கிறேன். எனினும், விகடனை பொறுத்த வரை எனக்கு சில முரண்பாடுகள் உள்ளன. விகடன் விமர்சனத்தில் 50 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள்.என்னுடைய ‘புது வசந்தம்’ திரைப்படத்தை பார்த்த அனைவரும், இத்திரைப்படம் கண்டிப்பாக விகடனில் 50 மதிப்பெண்களை தாண்டும் என்று கூறினார்கள். 60 மதிப்பெண்கள் பெற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தெரிவித்தனர்.ஆனால், அந்த திரைப்படத்திற்கு 46 மதிப்பெண்கள் தான் விகடனில் கிடைத்தது. என்னுடைய பல திரைப்படங்களுக்கு மிகவும் குறைவான மதிப்பெண்கள் தான் விகடனில் இருந்து கிடைத்தது. குறிப்பாக, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ திரைப்படத்திற்கு 35 மதிப்பெண்கள் தான் கிடைத்தது.ஆனால், அப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. ‘சூர்யவம்சம்’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போதும், யூடியூபில் நிறைய வியூஸ்களை ‘சூர்யவம்சம்’ திரைப்படம் கடந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இப்படத்தை பார்த்தனர்.ஆனால், இப்படத்திற்கு விகடன் கொடுத்த மதிப்பெண்கள் 39 தான். சொல்லப்போனால், ‘சூர்யவம்சம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற சக்திவேல் கதாபாத்திரம் தான் ஆனந்த விகடன்; படத்தில் வரும் சின்ராசு கேரக்டர் நான். ஒரு நாள் விகடனில் 50 மதிப்பெண்கள் வாங்கும் அளவிற்கு நல்ல படம் நான் எடுப்பேன். நிச்சயம், ஆனந்த விகடனின் பாராட்டுகளை நான் பெறுவேன் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.சமீபத்தில் ஆனந்த விகடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version