சினிமா

இளைஞர்களுக்கு சமந்தாவின் அறிவுரை

Published

on

இளைஞர்களுக்கு சமந்தாவின் அறிவுரை

பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய்யினால் பாதிக்கப்பட்டு அண்மைக்காலமாக  சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தள நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடி பல்வேறு கேள்விகளுக்கு அவர்  பதில் அளித்துள்ளார். 

இதன் போது  ”எனது சருமம் நீங்கள் நினைப்பதுபோல் மினுமினுப்பாக இல்லை. மயோசிடிஸ் சிகிச்சையில் நிறைய ஸ்டெராய்ட்ஸ் எடுத்ததால் சரும பிரச்சினைகள் ஏற்பட்டு கஷ்டப்பட்டேன்.

Advertisement

இனிமேல் கதை தேர்வில் ஜாக்கிரதையாக இருக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு சரிப்பட்டு வரும் கதைகளில் மட்டுமே நடிப்பேன். வித்தியாசமான கதைகளில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது. 

வாழ்க்கையில் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு நான் சொல்வது என்ன வென்றால், சிறிய பிரச்சினைகளுக்காக வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்க வேண்டாம். கஷ்டங்கள், பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். சில நேரங்களில் அவையே நம்மை திடமாக மாற்றும். 25 வயதில் நான் இந்த நிலைமையில் இருப்பேன் என்றோ, இத்தனை பிரச்சினைகளை என்னால் சமாளித்து இருக்க முடியும் என்றோ நினைக்கவில்லை. எல்லாவற்றையும் நேர்மறையாக எடுத்து முன்னேற வேண்டும்” என அறிவுரையும் கூறியுள்ளார். 
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version