உலகம்

இஸ்ரேலியதலைமை அமைச்சருக்கு எதிராக பிடியாணை!

Published

on

இஸ்ரேலியதலைமை அமைச்சருக்கு எதிராக பிடியாணை!

(புதியவன்)

இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணை தொடர்பில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டவரைவு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உள்ள இஸ்ரேல் சார்பு குடியரசுகட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த சட்டவரைவை பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

அமெரிக்க குடியரசுகட்சி பெரும்பான்மை பெற்றுள்ள பிரதிநிதிகள் சபையில் 247 பேர் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன் 155 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

இஸ்ரேலை ஆதரிக்கும் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகளும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

Advertisement

இச்சட்டவரைவு நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அது சட்டமாக மாற்றப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. செனெட்டில் பெரும்பான்மையை கொண்டுள்ள ஜனநாயக கட்சியினர் இந்த சட்டவரைவை நிராகரிப்பார்கள் என பிபிசி தெரிவித்துள்ள போதிலும் செனெட்டின் ஆதரவு கிடைத்தால் மாத்திரமே இந்த சட்டவரைவு சட்டமாகும். அமெரிக்க அரசதலைவர் ஜோபைடன் இந்த சட்டவரைவை கடுமையாக எதிர்க்கின்றார் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது. (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version