உலகம்

இஸ்ரேல் தாக்குதல் குறித்து விவாதித்துவரும் ஜோ பைடன்!

Published

on

இஸ்ரேல் தாக்குதல் குறித்து விவாதித்துவரும் ஜோ பைடன்!

லெபனானில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரானின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் விதமாக அங்குள்ள எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க இதுவே சரியான தருணம் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளதுடன் ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக தொடங்க இஸ்ரேல் அரசையும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  பேசியுள்ள நிலையில் 

இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு உள்ளது. ஈரான் எண்ணெய் ஆலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதித்து வருகிறோம் எனவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன. [ ஒ ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version