உலகம்

இஸ்ரேல் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் ஐ.நா.வின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 பேர் சாவு!

Published

on

இஸ்ரேல் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் ஐ.நா.வின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 பேர் சாவு!

காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் ஐ.நா.வின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் மத்தியில் உள்ள நுசெய்ரட்டின் இரு பாடசாலைகள் தாக்கப்பட்டதுடன் கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா.வின் அமைப்பின் புகலிடத்தின் முகாமையாளர் உட்பட பலர் உள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும்,  பாடசாலை மைதானத்தில் அமைந்திருந்த ஹமாசின் கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது துல்லியமான தாக்குதலை மேற்கொண்டதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்றவேளை அங்கு 5000க்கும் அதிகமானவர்கள் காணப்பட்டனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.  கடந்த வருடம் போர் ஆரம்பித்தது முதல் இதுவரை ஐந்து தடவைகள் குறித்த பாடசாலை மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது. இப்பாடசாலையில் இடம்பெயர்ந்த சுமார் 12ஆயிரம் பேர் தங்கியுள்ளனர் என ஐ.நா குறிப்பிட்டுள்ளது. (ச)
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version