உலகம்
ஈரான் அரச தலைவரின் உயிரிழப்பின் எதிரொலி: உலகளவில் அதிகரித்தது தங்கம் மற்றும் பெற்றோல் விலை!
ஈரான் அரச தலைவரின் உயிரிழப்பின் எதிரொலி: உலகளவில் அதிகரித்தது தங்கம் மற்றும் பெற்றோல் விலை!
(புதியவன்)
ஈரானிய அரச தலைவர் இப்ராஹிம் ரைசியின் உயிரிழப்பால் உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுளன.ஈரான் அரச தலைவரின் உயிரிழப்பையடுத்து கடந்த திங்கள் கிழமை பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
ஈரானின் தற்போதய நிலைமையின் அடிப்படையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவதால் பெற்றோல் மற்றும் டீசல் விலையும் அதிகரிக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளதுடன் ரைசியின் உயிரிழப்பால் பங்குச் சந்தையிலும் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டார்கள் தங்கத்தை நோக்கி சென்ல்வதால் அதற்குரிய கேள்வியும் அதிகரித்து தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஈரானில் ஒரு நிலையான தலைமை உருவாகும் வரை இந்த நிலைமை நீடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஞ)