இலங்கை
ஒரு வினாடிக்கு சுமார் 1 மில்லியன் ஜிகாபைட் ; உலக சாதனை படைத்த பொறியாளர்கள்
ஒரு வினாடிக்கு சுமார் 1 மில்லியன் ஜிகாபைட் ; உலக சாதனை படைத்த பொறியாளர்கள்
1.02 பெட்டாபிட்ஸ் (Petabits) இணைய வேகத்தைக் கண்டுபிடித்து, ஜப்பான் பொறியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
1.02 பெட்டாபிட்ஸ் என்பது ஒரு வினாடிக்கு சுமார் 1 மில்லியன் ஜிகாபிட்ஸ் (Gigabits) ஆகும்.
இது சராசரி இணைய வேகமான 63.55 எம்பிபிஎஸ் ஐ விட 16 மில்லியன் மடங்கு வேகமானது.
இந்த இணைய வேகம் மூலம், நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தில் உள்ள அனைத்து படங்களையும் மற்றும் 150GB உள்ள வார்சோன் (Warzone) போன்ற இணைய கேம்களை கண் இமைக்கும் நேரத்தில் பதிவிறக்கம் செய்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் தற்போது, ஆய்வக சோதனையிலிருந்தாலும், எதிர்கால தரவு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய படிக்கல்லாக இது பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த அதிவேக இணையம் தற்போது பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இல்லை.
இன்னும் இதற்குப் பல ஆண்டுகள் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த இணைய வேகச் சேவையை அடைய, ஜப்பான் பொறியாளர்கள் 1,800 கிலோ மீற்றருக்கும் அதிகமான, 19-கோர் ஆப்டிக்கல் பைபர் கேபிளை (Core Optical Fiber Cable) பயன்படுத்தியுள்ளனர்.
இது, சராசரியாக லண்டனிலிருந்து ரோம் வரையிலான தூரத்துக்குச் சமம்.