சினிமா
கட்டம் போட்ட சட்டையில் அஜித் குமார்!
கட்டம் போட்ட சட்டையில் அஜித் குமார்!
[ புதியவன் ]
திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். துணிவு படத்தைத் தொடர்ந்து இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் முதற்பார்வை சுவரொட்டி சமீபத்தில் வெளியானது.
இந்த சுவரொட்டிக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த படத்தின் முதற்பார்வை சுவரொட்டியை தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.
கட்டம் போட்ட சட்டையில்,சிரித்த முகத்துடன் காணப்படும் அஜித்தின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. [ ஒ ]