உலகம்

காசாவில் இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!

Published

on

காசாவில் இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்றைய தினம் பேசியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் முகாமில் தஞ்சமடைந்திருந்த 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள்  என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Advertisement

இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 வரை உயரும் என்றும்  எதிர்பார்க்கப்படுகின்றது . 

மேலும் இந்த தாக்குதலில் குழந்தைகள் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜபாலியா முகாமில் உள்ள பல்வேறு தற்காலிக குடியிருப்புகள் மீதும் வான்வழியாக வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. 

Advertisement

கடந்த ஒரு வருடமாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 42,500 பேர் உயிரிழந்துள்ளதுடன்  99,௦௦௦ பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்

காசாவில் மொத்தம் 8 பெரிய அகதி முகாம்கள்  காணப்படுகின்ற நிலையில்  மிகப்பெரிய அகதிகள் முகாமாக  ஜபாலியா கருதப்படுகின்றது.[ ஒ ] 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version