உலகம்

சூடான் போர் அமைதிக்கு வரபோவதில்லை- ஐ.நா கவலை

Published

on

சூடான் போர் அமைதிக்கு வரபோவதில்லை- ஐ.நா கவலை

ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்புமே போரிட்டு வருவதாகவும் அமைதிக்கு அவர்கள் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்புமே போரிட்டு வருவதாகவும் அமைதிக்கு அவர்கள் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.ஜெனீவா, சூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது என கூறப்பட்டது.

எனினும், அதனையும் மீறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால், சூடானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த பணியில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவியுடன் நேரிடையாக களத்தில் இறங்கி, தங்களது தூதர்கள் மற்றும் குடிமக்களை மீட்டு வருகின்றன. இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்புமே போரிட்டு வருவதாகவும் அமைதிக்கு அவர்கள் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

Advertisement

 

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version