வணிகம்
சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கா? கம்மி பேலன்ஸ் இருந்தா இனி அபராதம் இல்லை; இந்த வங்கிகள் அதிரடி அறிவிப்பு!
சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கா? கம்மி பேலன்ஸ் இருந்தா இனி அபராதம் இல்லை; இந்த வங்கிகள் அதிரடி அறிவிப்பு!
வங்கிக் கணக்குகளில் சராசரி மாத இருப்பை (AMB – Average Monthly Balance) பராமரிக்க தவறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத கட்டணங்களை முன்னணி பொதுத்துறை வங்கிகள் ரத்து செய்து வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு இது சாதகமாக அமைந்துள்ளது.பொதுவாக, ஒரு வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பு தொகையே, சராசரி மாத இருப்பு எனப்படும். இந்த இருப்பு தொகை குறைந்தால், வங்கிகள் அபராத கட்டணங்களை விதிப்பது வழக்கம். இந்த கட்டணங்கள் சேமிப்புக் கணக்கின் வகையைப் பொறுத்து மாறுபடும். குறிப்பிட்ட சில வங்கிகள் இந்த விதிமுறையை தற்போது தளர்த்தியுள்ளன.பேங்க் ஆஃப் பரோடா:பேங்க் ஆஃப் பரோடா வங்கி, ஜூலை 1, 2025 முதல் அனைத்து சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காததற்கான கட்டணங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் மாதாந்திர சராசரி இருப்பு குறைவாக இருந்தாலும் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், பிரீமியம் சேமிப்பு கணக்கு திட்டங்களுக்கு இந்த விலக்கு பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்தியன் வங்கி:இந்தியன் வங்கி, ஜூலை 7, 2025 முதல் அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்பு தொகை நிபந்தனையை முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் இனி குறைந்தபட்ச இருப்பு தொகை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.கனரா வங்கி:மே 2025-இல், கனரா வங்கியும் தனது அனைத்து வகையான சேமிப்பு வங்கி கணக்குகளுக்கும், அதாவது சாதாரண சேமிப்புக் கணக்குகள், சம்பள கணக்குகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேமிப்புக் கணக்குகள் (NRI savings accounts) உட்பட, அனைத்திலும் சராசரி மாத இருப்பு தேவையை நீக்குவதாக அறிவித்தது.பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி):பஞ்சாப் நேஷனல் வங்கியும் (பி.என்.பி) இனி அனைத்து சேமிப்புக் கணக்குகளிலும் குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்க தவறியதற்காக அபராத கட்டணங்களை வசூலிக்காது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ):இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), 2020 முதல் அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியத்தை ரத்து செய்துவிட்டது. எனவே, சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்படாவிட்டால் எந்த அபராதமும் இல்லை.பேங்க் ஆஃப் இந்தியா:பேங்க் ஆஃப் இந்தியாவும் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்பு அபராதங்களை ரத்து செய்துள்ளது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்பவும், நிதி நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று பேங்க் ஆஃப் இந்தியாவின் பத்திரிகை வெளியீடு தெரிவித்துள்ளது.