இலங்கை
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வடிவேல் சுரேஷ் அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வடிவேல் சுரேஷ் அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் தான் யாருக்கு ஆதரவளிப்பது என எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக இலங்கை பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதிஅறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணங்களையும் செலுத்தி வருகின்றனர்.
எனினும் இது தொடர்பாக தான் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் எதிர்வரும் நாட்களில் தனது தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க அங்கத்தவர்களிடம் கலந்து ஆலோசித்து எதிர்வரும் 12ஆம் திகதி தான் யாருக்கு ஆதரவளிப்பது என அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (ஞ)