விளையாட்டு

டியூக்ஸ் பந்து சர்ச்சை: ‘ரொம்பவே விசித்திரமா இருக்கு’… கில், பும்ராவை விளாசிய மாஜி வீரர்!

Published

on

டியூக்ஸ் பந்து சர்ச்சை: ‘ரொம்பவே விசித்திரமா இருக்கு’… கில், பும்ராவை விளாசிய மாஜி வீரர்!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, லீட்சில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள  லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை 3:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.பின்னர், முதல் இன்னிங்சில் ஆடி வரும் இந்திய அணி 3-வது நாள் மதிய உணவு இடைவேளையின் போது, 65.3 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 74 ரன்களுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். 98 ரன்களுடன் கே.எல். ராகுல் களத்தில் இருக்கிறார். டியூக்ஸ் பந்து சர்ச்சை இந்த தொடருக்கு டியூக்ஸ் பந்துகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் வடிவமைப்பை சீக்கிரம் இழந்து விடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. நேற்றைய ஆட்டத்தின் போது கூட, 80-வது ஓவருக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்பட்ட போதிலும் அதன் தன்மையும் விரைவாக மாறியது. இதனால் பந்தை மாற்றக்கோரி இந்திய அணியினர் அடிக்கடி நடுவரிடம் முறையிட்டனர். இதையடுத்து 90.4-வது ஓவரிலும், 98.4-வது ஓவரிலும் பந்து இரண்டு முறை மாற்றப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. பல முன்னாள் வீரர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன், சுப்மன் கில் மற்றும் அவரது அணியின் வினோதமான பந்து மாற்றக் கோரிக்கையை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இது இந்தியாவிடம் இருந்து வந்த ஒரு வித்தியாசமான பந்து மாற்றம். நீங்கள் ஒரு கிரிக்கெட் பந்தை மாற்றுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, நடுவர்கள் அதன் வடிவத்தை இழந்துவிட்டதாக நினைப்பதால், அல்லது இரண்டு, பந்து வீச்சாளர்களும் கேப்டனும் பந்து எதையும் செய்யவில்லை என்பதை உணர்ந்து நடுவர்களை அதை மாற்றச் சொல்ல முயற்சிப்பதால் மட்டுமே நிகழும். ஆனால், இன்று காலை பந்து எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தது. அவர்கள் 63 பந்துகளுக்கு வைத்திருந்த பந்து, மூலை முடுக்குகளில் ஜிப் செய்து கொண்டிருந்தது. பும்ரா  மாயாஜால மந்திரத்தை கடந்து கொண்டிருந்தார். மறுபுறம் சிராஜ் பந்தில் கேட்சுகள் தவறவிடப்பட்டது. பந்து விக்கெட் கீப்பருக்கு எடுத்துச் செல்கிறது. அது எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தது. டெஸ்ட் போட்டியின் எந்த கட்டத்திலும் இல்லாத அளவுக்கு அது அதிகமாகச் செய்தது.பந்தை இவ்வளவு அதிகமாக, அறுபத்து மூன்று பந்துகளில் ஜிப் செய்து கொண்டிருந்த ஒரு பந்தை நீங்கள் ஏன் மாற்ற விரும்புகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. அவர்கள் அதை மாற்ற விரும்பினர் மட்டுமல்ல, அவர்கள் அதை மாற்றாதபோது கேப்டன் மிகவும் எரிச்சலடைந்தார். இது மிகவும் வினோதமான முடிவுகளில் ஒன்று என்று நான் நினைத்தேன்.உங்க கையில் நிறைய வேலைகள் செய்ற ஒரு பந்து இருக்கு. இந்த டியூக்ஸ் பந்துகள் மாறி மாறி வரும்னு நாம எல்லாருக்கும் தெரியும். அவர் இன்னும் பந்து மாற்றம் பத்தி நடுவரிடம் பேசிட்டு இருக்காரு. இப்போ அவர் நடுவரிடம், ‘இந்த பந்து கடைசி பந்து மாதிரி நல்லா இல்ல’ன்னு சொல்லியிருக்காரு. ஆனா, நல்ல பந்து இருந்தா, அதோடயே இருக்கணும். அதுதான் பிரச்சனை. நமக்கு கிடைச்ச பந்து நல்லா இல்லன்னு சொல்றது ரொம்பவே விசித்திரமா இருக்கு. நல்லதை மாத்தாதீங்க.” என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version