சினிமா
தனுஷ் சூப்பர் ஸ்டார்லாம் கிடையாது..கேவலமா நடத்துனாரு!! பிரபலம் ஓபன் டாக்..
தனுஷ் சூப்பர் ஸ்டார்லாம் கிடையாது..கேவலமா நடத்துனாரு!! பிரபலம் ஓபன் டாக்..
தமிழ் சினிமாவை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்று வருபவர் நடிகர் தனுஷ். அவர் நடிப்பில் குபேரா படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் தனுஷின் 54வது படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், பாலிவுட்டை சேர்ந்த தொகுப்பாளர் நயன் தீப் ரக்ஷத், சமீபத்திய பேட்டியொன்றில் தனுஷ் பற்றிய ஒரு அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்துள்ளார்.அதில் அவர், தனுஷ், கஜோல் இருவரும் நடித்த விஐபி 2 படத்தின் ரிலீஸ்க்கு முன் அவர்களை பேட்டி எடுத்தேன். தனுஷின் பிஆர் என்னை தனுஷுக்கு அறிமுகப்படுத்தினார். நான் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவே இல்லை. கஜோலுடன் இணைந்து நடித்தது குறித்து உங்கள் அனுபவம் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர், அதை கஜோலிடம் கேளுங்கள் என்று மிகவும் கோபமாக பதிலளித்தார்.அந்த பேட்டிக்கு நடுவில், ஒருவர் எனக்கும் தனுஷுக்கு ஜூஸ் கொடுக்க வந்தார். அப்போது அந்த ஜூஸ் கொடுக்க வந்த நபரை தனுஷ் மிகவும் கேவலமாக நடத்தினார். என்னால், இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனுஷ் பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் சூப்பர் ஸ்டாருக்கான தகுதிகள் என்பது நீங்கள் சக மனிதர்களை எப்படி கண்ணியமாக நடத்துகிறீர்கள் என்பதை பொறுத்துதான்.குறிப்பாக சமூகத்தில் உங்களைவிட மிகவும் கீழ்நிலையில் உள்ளவர்களான உங்களது மேனேஜர், பிஆர், ஜூஸ் கொடுக்க வந்தவர்கள் உள்ளிட்டவர்களை எப்படி மரியாதையாக நடத்துகிறீர்கள் என்பது பொறுத்துதான்.பேட்டி முடிந்ததும், அவரது பிஆர் வந்தார், அவரை பார்த்து இந்த பேட்டி எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நீ தானே சொன்னாய் என்று தனுஷ் கேட்டார். உடனே நான் ஏன் சார் பிடிக்கவில்லையா என்று கேட்டதற்கு, உடனே நீங்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும், படத்தினை பிரமோட் செய்யத்தான் உங்களுக்கு பேட்டி தருகிறோம்.ஆனால் படம் குறித்து நீங்கள் ஒரு கேள்விக்கூட கேட்கவில்லை என்று தனுஷ் தெரிவித்தார். அதற்கு நான், படம் குறித்த கேள்விகளுடன் தான் உங்களிடம் வந்தேன், ஆனால் உங்கள் மேனேஜர் நான் என்னென்ன கேள்வ்களை கேட்கவேண்டும் என்று அவர் தான் கேள்விகளை தேர்வு செய்தார் என்று தொகுப்பாளர் நயன் தீப் ரக்ஷத் தெரிவித்துள்ளார்.அவர் பேட்டியளித்த அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள், நயன் தீப் ரக்ஷத் நயன் தாராவுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர். தனுஷ் இடையே பிரச்சனை ஏற்பட்டபோது நயன் தாராவின் பதிவிற்கு, ஆதரவான கருத்தை பதிவிட்டுள்ளார் என்று ஸ்கீரின் ஷாட்களை பகிர்ந்து வருகிறார்கள்.