இலங்கை
தாயின் கொடூரம் ; காதலனுக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற பெண்
தாயின் கொடூரம் ; காதலனுக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற பெண்
உத்தர பிரதேசத்தில் மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசிக் கொடூரமாகக் கொன்ற தாய்க்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின், அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் கணவர் இறந்தபின், அவருக்குப் பிறிதொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
தங்களது காதலுக்குக் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக எண்ணிய அந்த பெண், தனது காதலனுடன் சேர்ந்து அவர்களைக் கொல்லத் திட்டமிட்டார்.
அதன்படி, ஆற்றுப் பகுதிக்கு 4 மகன்களையும் அழைத்துச் சென்று, அவர்களுக்குப் போதைப்பொருள் கொடுத்துத் தண்ணீரில் வீசியதாகக் கூறப்படுகிறது.
மயங்கிய நிலையிலிருந்த ஒரு குழந்தையை மட்டும் மக்கள் மீட்டதுடன், மற்ற மூன்று குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கிராம மக்கள் அளித்த தகவலின்படி, குழந்தைகளின் தாய் மற்றும் அவரின் காதலனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
குறித்த சம்பவத்தின், வழக்கு விசாரணையின் போது, உயிர் பிழைத்த மகன் தன் தாய்க்கு எதிராக வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, மூன்று குழந்தைகளைத் தண்ணீருக்குள் மூழ்கடித்துக் கொன்ற தாய்க்கு மரண தண்டனையும், 2.5 இலட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதமும், அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனையும், 1 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், அந்த தொகையில், 75 சதவீதத்தை உயிர் பிழைத்த குழந்தைக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.