உலகம்

துருக்கி நிலநடுக்கத்தின் போது காணாமல் போனவர் சுமார் 3 மாதங்களின் பின்பு மீட்டெடுப்பு

Published

on

துருக்கி நிலநடுக்கத்தின் போது காணாமல் போனவர் சுமார் 3 மாதங்களின் பின்பு மீட்டெடுப்பு

உலக நாடுகளை உலுக்கிய துருக்கி – சிரியா நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து 3 மாதங்களுக்கு பின்னர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

 

Advertisement

கடந்த பெப்ரவரி மாதம் துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் 7.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்த இடிபாடுகளில் சிக்கிய பொதுமக்களை மீட்பதற்காக பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீட்பு படையினர் துருக்கி மற்றும் சிரியாவிற்கு விரைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

Advertisement

துருக்கி மற்றும் சிரியாவில் பொதுமக்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

 

இந்நிலையில் சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பின்னர் ஒருவரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.உடல் மெலிந்த நிலையில் உயிருடன் இருந்த குறித்த நபர் மீட்கப்பட்டு மருத்துவமனை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

 

இருப்பினும் இந்த நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி குறித்த நபர் எவ்வாறு மூன்று மாதங்கள் வரை உயிர் பிழைத்தார் என்ற அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நபர் தற்போது சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்காக மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version