இலங்கை
தேசிய இன சமத்துவத்திற்காக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்!
தேசிய இன சமத்துவத்திற்காக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்!
அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கை எழுத்துப்போராட்டம் ஒன்று வவுனியாவில் நடைபெற்றது.
இப்போராட்டம் இலுப்பையடிப் பகுதியில் இன்று சனிக்கிழமை (12) காலை முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்க வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்பட வேண்டும், சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த போராட்டத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.