உலகம்

நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா காலமானார்

Published

on

நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா காலமானார்

நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா புற்று நோய் காரணமாக நேற்றைய தினம் தனது 43வது வயதில் காலமாகியுள்ளார்.

 நெல்சன் மண்டேலா அறக்கட்டளை  ஜோலேகா மண்டேலாவின் மறைவுக்கு “மண்டேலா குடும்பத்தினருக்கு இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றவாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Advertisement

ஜோலேகா மண்டேலா ஒரு எழுத்தாளராக மட்டுமன்றி தனது வாழ்நாள் முழுவதும் சுகாதாரம் மற்றும் நீதிக்காக உழைத்தவராவார்.

மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version