சினிமா
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் கனவு படத்திற்கு புதிய அப்டேட்…!வேல்பாரி கனவு நிஜமாகுமா?
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் கனவு படத்திற்கு புதிய அப்டேட்…!வேல்பாரி கனவு நிஜமாகுமா?
தமிழ் சினிமாவை புதிய உச்சத்திற்கு அழைத்த இயக்குனராக சினிமா ரசிகர்களால் போற்றப்படுபவர் இயக்குனர் சங்கர். 1993ல் ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தின் மூலம் தனது இயக்குநர் பயணத்தை ஆரம்பித்த சங்கர், தமிழ் சினிமாவில் புதுமையும், பிரம்மாண்டத்தையும் கலந்த ஒரு புதிய பாதையை உருவாக்கினார்.‘காதலன்’, ‘இந்தியன்’, ‘முத்து’, ‘ஜீன்ஸ்’, ‘பாய்ஸ்’, ‘அந்நியன்’ என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்தார். ஒவ்வொரு படமும் அவருடைய விசுவல் ஐடியா மற்றும் பெரிய பட்ஜெட்டில் எடுத்துக் காட்டும் திறனை நிரூபித்தது.2010ல் வந்த ‘எந்திரன்’ திரைப்படம் அவரது இயக்கத் திறனை பன்மடங்காக உயர்த்தியது. ரஜினிகாந்த் ரோபோவாக நடித்த இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் நவீன முன்னேற்றத்துக்கான அடையாளமாக அமைந்தது. உலகமெங்கும் பாராட்டுகள் குவிந்த இந்த படத்துக்குப் பிறகு, சங்கர் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கினார்.இப்போது, ‘வேல்பாரி’ என்ற புதுப்படம் அவரது கனவாக மாறியிருக்கிறது. இயக்குநர் சங்கர் இதைப் பற்றி கூறும் போது, “எனது முதல் கனவு திட்டம் ‘எந்திரன்’ படம். அதை வெற்றிகரமாக முடித்துவிட்டேன். தற்போது ‘வேல்பாரி’ படம் என் புதிய கனவாக மாறியுள்ளது. இது ‘Game of Thrones’ மற்றும் ‘Avatar’ போன்ற உலக அளவிலான படங்களுக்கு நிகராக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்று கூறுகிறார்.இதே நேரத்தில், அவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர், ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் அறிமுகமானார். மருத்துவராகப் பட்டம் பெற்றவர் என்றாலும், திரையுலகில் கால் பதிக்க அவர் எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் இயக்குநர் சங்கரின் மகள் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தாலும், ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் “சங்கர் சார் சினிமாவில் பிரம்மாண்டம், ஆனால் உங்கள் மகள் அப்படிப்பட்ட ரீச் இல்லை போல” என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இது குறித்து சங்கர் கூறும்போது, “மிகவும் தெளிவாகக் கூறுகிறேன். எனது மகள் சினிமாவில் வெற்றி பெறவில்லை என்றால், அவள் மீண்டும் மருத்துவத்தை தொடர வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது,” என்று கூறியிருக்கிறார். சங்கர் தனது கனவுகளை வலியுறுத்தி, உலக அரங்கில் தமிழ்சினிமாவின் தரத்தை உயர்த்தும் முயற்சியில் தொடர்ந்து பயணிக்கிறார். அவரது ‘வேல்பாரி’ படம் எப்போது திரைக்கு வரும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.