உலகம்

பிறப்பு சான்றிதழ் பெறச்சென்றதந்தை  :  பிறந்து நான்கு நாட்களேயான இரட்டை குழந்தைகள் குண்டுவீச்சில் உயிரிழப்பு!

Published

on

பிறப்பு சான்றிதழ் பெறச்சென்றதந்தை  :  பிறந்து நான்கு நாட்களேயான இரட்டை குழந்தைகள் குண்டுவீச்சில் உயிரிழப்பு!

காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டைக்குழந்தைகள் மற்றும் தாய்இ பாட்டி ஆகியோர் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்வதற்காக தந்தை உள்ளூர் அரசாங்க அலுவலகத்தில் இருந்தபோது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் இவர்கள் நால்வரும் கொல்லப்பட்டனர்.

அஸ்ஸர் என்ற ஆண் குழந்தையும்இ அய்செல் என்ற பெண் குழந்தையும் பிறந்து நான்கு நாட்களே ஆன நிலையில்இ ​​அவர்களது தந்தை மொகமட் அபு அல் கும்சன் அவர்களின் பிறப்புச் சான்றிதழைப் பெறச் சென்றார்.

Advertisement

அவர் அலுவலகத்தில் இருந்தபோதுஇ ​​அவரது அயலவர்கள் அவரது வீட்டின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். “என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லைஇ” என்று அவர் கூறினார்.

“அது வீட்டைத் தாக்கிய ஷெல் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.” “அவர்களுட்ன் மகிழ்ச்சியாக இருக்க எனக்கு நேரம் இல்லைஇ” என்று அவர் மேலும் தெரிவித்தார். காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம்இ போரின் போது 115 குழந்தைகள் பிறந்து பின்னர் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version