இலங்கை

பொது மலசலகூடத்தில் இரு சடலங்கள் மீட்பு!

Published

on

பொது மலசலகூடத்தில் இரு சடலங்கள் மீட்பு!

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது  மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர்  ஒருவரின் சடலமும்இ இன்று (27) ஆரியபுர பொகவந்தலாவையைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மலசல கூடத்தில் இருவர் விழுந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்து சம்பவ இடத்துக்கு வந்தவர்கள் குறித்த இருவரும்  உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியதையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் மலசல கூடத்தில்  வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஞ)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version