உலகம்

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

Published

on

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற நிலைமை மற்றும் பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பில்  இலங்கை வெளிவிவகார அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதலின் தீவிரம் குறிப்பாக லெபனானில் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

Advertisement

இப்பிராந்தியத்தில் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் பணிபுரிவதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பாதுகாப்பையும், நலனையும் உறுதிப்படுத்த ஏற்கனவே அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அறிவுறுத்தல்களும் இலங்கை தூதரகங்களால் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்கள் இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, அதற்கேற்ப செயற்படுமாறும்  

Advertisement

ஏதேனும் அவசர சந்தர்ப்பங்களில் மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களின் உறவினர்கள், வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 011 – 2338812/ 011 – 7711194 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.[ ஒ ] 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version