சினிமா
மனதை மிரளச் செய்த “ஜென்ம நட்சத்திரம்” டிரெய்லர் வெளியீடு..!ஜூலை 18ல் மாஸ் ரிலீஸ்..!
மனதை மிரளச் செய்த “ஜென்ம நட்சத்திரம்” டிரெய்லர் வெளியீடு..!ஜூலை 18ல் மாஸ் ரிலீஸ்..!
தமிழ் சினிமாவில் தனித்துவமான ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள “ஜென்ம நட்சத்திரம்” ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திகில், மர்மம், மந்திரம் ஆகிய அனைத்தையும் ஒரே பட்டறையில் கிளறும் இப்படம், குறிப்பாக “666” என்ற எண் மற்றும் அதனுடன் தொடர்புடைய பரபரப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வழக்கமான ஹாரர் கதைகளிலிருந்து மாறுபட்டு, ஆழமான கதைக்களத்துடன் சினிமாப் பிரியர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, பாய்ஸ் ராஜன், நக்கலைட்ஸ் நிவேதித்தா மற்றும் யாசர் ஆகியோர் நடித்து தனித்துவம் மிகுந்து இயங்கியுள்ளனர்.இப்படத்தை அமோஹம் ஸ்டூடியோஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, தயாரிப்பாளராக கே. சுபாஷினி பொறுப்பேற்றுள்ளார். “ஒரு நொடி” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பி. மணிவர்மன் இப்படத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.சமீபத்தில் வெளியான டிரெய்லர்-ல் பல திகிலூட்டும் காட்சிகள், ஹாரர் காட்சிகளின் சித்திரவதை, 666 எண்ணின் மர்மங்கள், கதையின் பரபரப்பான திருப்பங்கள் மற்றும் அழுத்தமான பின்னணி இசை மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.”ஜென்ம நட்சத்திரம்” திரைப்படத்தை உலகளவில் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். இப்படம் ஜூலை 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் ஹாரர் திரைப்பட ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல், சிக்கலான கதைகளை விரும்பும் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.