உலகம்

மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து சடலம் மீட்பு!

Published

on

மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து சடலம் மீட்பு!

(புதியவன்)

இந்தோனேஷியாவில் மாயமான பெண் ஒருவர் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் சடலமாக இருந்த சம்பவம் அதிர்வலைககளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மத்திய இந்தோனேஷியாவின் தெற்கு சுலவேசி பகுதியின், கலேம்பங் கிராமத்தைச் சேர்ந்த பரிதாவை (வயது – 45)   கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை. அவரது கணவரும், ஊரவர்களும் இணைந்து காணாமல்போன பரிதாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன்போது, அந்தப் பெண்ணின் உடைமைகளை அவரது கணவர் கண்டுபிடித்துள்ளார்.

உடைமைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தில் மலைப்பாம்பு வயிறு வீங்கிய நிலையில் இருப்பதாக ஊரவர்கள் தெரிவித்துள்ளனர். அதைப்பிடித்து அடித்துக்கொன்று அதன் வயிற்றை கிழித்துப்பார்த்தபோது பர்த்தா சடலமாக காணப்பட்டுள்ளார்.

Advertisement

இது போன்ற சம்பவங்கள் அரிதாக நடப்பதாகக் கூறினாலும், இந்தோனேஷியாவில் கடந்த சில ஆண்டுகளில் மலைப்பாம்பு விழுங்கி பலர்  உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version