சினிமா
மாஸ் காட்டிய சிம்பு!
மாஸ் காட்டிய சிம்பு!
[ புதியவன் ]
1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் சமகாலத்திற்கேற்ப அரசியல் பேசும் படமாக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது இதன் இரண்டாம் பாகம். முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ராஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் இந்த மாதம் 12ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதையொட்டி, இதன் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஷங்கர், கமல், அனிருத், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் வசந்த பாலன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குநர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவிற்கு சிம்பு அதிரடியாக வருகை கொடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் குறித்தும் கமல் குறித்தும் பேசியிருக்கும் நடிகர் சிம்பு, “தாமதமாக வந்தமைக்கு எதுவும் நினைக்கவேண்டாம். மணி ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் இருந்து வருகின்றேன். இந்தியன் படம்தான் எனக்கு பிடித்தமானது என நான் கமலிடம் சொல்லியிருக்கின்றேன். பல முறை இந்தப் படத்தை பார்த்தும் இருக்கின்றேன். இந்த படத்துக்குத் தேவையான அனைத்து விடயங்களும் இருக்கிறது. இப்பொழுது கமல் கூட சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை ‘தக் லைஃப்’ மேடையில் பேசுகின்றேன். மக்களுக்கு பிடிச்ச விடயங்களை செய்ய வேண்டும் எனும் கமல் தேடல் மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான படங்களைதான் ஷங்கர் கொடுப்பார். பெரிய படங்கள் தயாரிப்பது சுலபமான விடயம் அல்ல. ஷங்கர் தொடர்ந்தும் பெரிய படங்கள் தயாரித்து வருகின்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை இப்பொழுது வரைக்கும் மறக்க முடியாத அளவுக்கு செய்திருந்தார்.. இந்தப் படத்துக்கு இசை அமைப்பதுக்கு யாரைக் கேட்டாலும் செய்யமாட்டார்கள் ஆனால் , அனிருத் தைரியமாக செய்திருக்கிறார். இப்பொழுது எல்லோரும் இந்தியாவின் ரசிகர்கள் என்று கூறிவருகின்றனர்.ஆனால் , அந்த இந்தியன் எனும் தலைப்புக்கு உரித்தானவர் கமல் ஹாசன் தான்.
இந்தியன் என்றால் ஒற்றுமைதான். ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதைதான் இந்த படமும் உணர்த்தும் என நினைக்கின்றேன்.
‘விஸ்வரூபம்’ பட சமயத்தில் ஏதோ பிரச்சனை என கேள்விபட்டதும் உடனடியாக குளிக்காம கூட அவரிடம் போனேன். நான் உடல் எடையை குறைத்துள்ளேன் என பலர் பேசுகிறார்கள். ஆனால் ,அது ஆன்மிகம் சார்ந்த விடயம். எல்லோரும் நம்மை விட்டு ஒருநாள் போயிடுவார்கள்.
எங்களின் முடிகூட எம்மை விட்டு போய் விடும். எங்களிடம் இருப்பது எங்களுடைய உடம்புதான். அதை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள். நான் அதை தாமதமாகதான் புரிந்துகொண்டேன்.” என்று பேசியிருந்தார்.
சிம்புவின் வருகை,அவரின் பேச்சு சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.[ஒ]