இலங்கை
முச்சக்கர வண்டியும் உந்துருளியும் மோதி விபத்து
முச்சக்கர வண்டியும் உந்துருளியும் மோதி விபத்து
(புதியவன்)
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக முச்சக்கர வண்டியும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலத்த காயங்களுடன் லிந்துலை மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலையிலிருந்து லிந்துலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் தலவாக்கலையை நோக்கி பயணித்த உந்துருளியும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான விசாரணையை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ)